தாய் கண்டித்ததால் மதுபோதையில் வந்த மகன்கள் தற்கொலை

திருவள்ளூர் மாவட்டம் கம்மவார்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயலட்சுமி (49). இவரது மூத்த மகன் விக்னேஷ் (28), இளைய மகன் கணேஷ் (24). தன்னுடன் பணிபுரியும் பெண்ணை கனேஷ் காதலித்து வந்தார். இதனை தாயாரிடம் கூறிய நிலையில் அவர் கண்டித்துள்ளார். நேற்று முன்தினம் (ஜூலை 30) விக்னேஷ் மற்றும் கணேஷ் இருவரும் மது குடித்துவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளனர். காதல் விவகாரம், மதுப்பழக்கம் ஆகியவற்றையால் கடுப்பான தாயார், இருவரையும் கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி