சோனியா காந்தி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்

உடல்நலக்குறைவு காரணமாக டெல்லியில் உள்ள கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி (79) இன்று (ஜன., 11) டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். கடந்த திங்கள்கிழமை இரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, நுரையீரல் நிபுணர்கள் தலைமையிலான மருத்துவக் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். 
சோனியா காந்திக்கு நீண்ட நாட்களாக தொடர் இருமல் பாதிப்பு இருந்து வந்துள்ளது. அவர் குணமாகி தற்போது வீடு திரும்பியுள்ளார்.

தொடர்புடைய செய்தி