காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வயிறு தொடர்பான பிரச்சனை காரணமாக, அவர் டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இரைப்பை சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள சோனியா காந்தி தொடர் கண்காணிப்பில் உள்ளார் என மருத்துவமனை நிர்வாகம் தகவல் அளித்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பும் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.