பிரபல பாலிவுட் நடிகை சோனாக்சி சின்ஹா, மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான "ஜடதாரா" திரைப்படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமானார். தெலுங்கில் அவருக்கு ஒரு நல்ல தொடக்கமாக அமையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இப்படம் மோசமான விமர்சனங்களை பெற்று தோல்வியை தழுவியுள்ளது. இதனால், சோனாக்சி சோகத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரஜினியின் "லிங்கா" படம் மூலம் சோனாக்சி தமிழில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.