மதுபோதையில் தாயை வெட்டிய மகன்.. துப்பாக்கியால் சுட்ட தந்தை

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே குடும்ப தகராறு விபரீதமாக மாறியது. மதுபோதையில் இருந்த 25 வயது பிரபாகரன், தனது தாய் மாலாவை கத்தியால் வெட்டியதாக கூறப்படுகிறது. காயமடைந்த மாலா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து, “ஏன் தாயை தாக்கினாய்?” என கேட்டு மகனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட தந்தை சேகர், வீட்டில் இருந்த நாட்டு துப்பாக்கியால் மகனை சுட்டதாக தகவல். இதில் பிரபாகரனின் காலில் காயம் ஏற்பட்ட நிலையில், இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி