இந்தியாவைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர் ஆயுஷ்மான் சிங், தனது முதல் சம்பளத்தை பெற்றோருக்கு வழங்கிய உணர்ச்சிபூர்வமான வீடியோவை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், சிங் தனது பெற்றோரை ஆச்சரியப்படுத்தி, சர்ப்பிரைஸாக அவர்களுக்கு 500 ரூபாய் நோட்டுகளின் கட்டை பரிசாக வழங்குகிறார். இந்த நெகிழ்ச்சியான தருணத்தில் பெற்றோரின் முகத்தில் மகிழ்ச்சியை உணர முடிந்தது. மகனை உச்சிமுகர்ந்து பாராட்டிய பெற்றோர் அவரது பணி சிறக்க வாழ்த்தியுள்ளனர்.