தாய்க்கு 2-வது திருமணம் செய்து வைத்த மகன் (வீடியோ)

பாகிஸ்தான்: தாய்க்கு 2-வது திருமணம் செய்து வைத்த மகனின் செயல் இணையத்தில் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அப்துல் ஆசாத் என்ற இளைஞரின் தந்தை 18 வருடங்களுக்கு முன் இறந்துள்ளார். அதன்பின், அந்த இளைஞரின் தாயார் அவரை பல இன்னலுக்கு மத்தியில் வளர்த்துள்ளார். தனது தாயாரின் தனிமையை உணர்ந்த அப்துல், பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் தனது தாய்க்கு 2-வது திருமணம் செய்து வைத்துள்ளார். இதன் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி