தெலங்கானா மாநிலம் நாகர் கர்னூல் மாவட்டம் கல்வகுர்த்தி அருகே, மனைவி பிரிந்ததற்கு மாமியாரே காரணம் என எண்ணிய மருமகன், தனியாக வீட்டில் தூங்கியிருந்த மாமியாரை வன்கொடுமை செய்து கொடூரமாக அடித்து கொலை செய்து தப்பினார். ரத்த வெள்ளத்தில் உயிரிழந்த பெண்ணின் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான மருமகனை தேடி வருகின்றனர்.