குளித்தலை அருகே நச்சலூரில் போதையில் மனைவியின் தாலியைப் பறிக்க முயன்ற மோகன்ராஜ் என்பவர், தன் மனைவி பூவாயி, மகன் மணிகண்டனைத் தாக்கியுள்ளார். இதனால் ஏற்பட்ட குடும்பத் தகராறில், மகன் மணிகண்டன் தன் தந்தை மோகன்ராஜை இரும்புக் கம்பியால் தலையில் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இக்கொலை குறித்து நங்கவரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.