வாட்ஸ்அப் செயலியில் அறிமுகமில்லாத எண்களிலிருந்து வரும் தேவையற்ற லிங்க்குகள், பரிசுகள் மற்றும் வங்கி விவரங்களை கேட்கும் சந்தேகத்திற்கிடமான குறுஞ்செய்திகளை கிளிக் செய்யாமல் உடனடியாக தவிர்க்க வேண்டும் என்று சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். மேலும், பயனர்கள் தங்களது தனிப்பட்ட தகவல்களையோ அல்லது கடவுச்சொற்களையோ யாருடனும் பகிர கூடாது என்றும், கணக்கின் பாதுகாப்பை அதிகரிக்க Two-step verification முறையை தவறாமல் செயல்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.