மேலும் சில அதிமுக எம்.எல்.ஏ-க்கள் தவெகவில் இணைய வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே எஸ்பி வேலுமணி ஆதரவாளர்களான இசக்கி சுப்பையா உள்ளிட்ட 4 பேர் விலகிய நிலையில், சிலர் மீண்டும் இபிஎஸ் பக்கமே திரும்பியுள்ளனர். ஆனால், பாப்பிரெட்டிப்பட்டி மரகதம் வெற்றிவேல், பரமத்திவேலூர் சேகர், சங்கராபுரம் ராகேஷ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ-க்கள் இதுவரை இபிஎஸ்-ஐ சந்திக்காததால், அவர்களில் சிலர் தவெகவில் இணையலாம் எனக் கூறப்படுகிறது.