“மாடுகள் பிரச்னைக்கு தீர்வு".. LJK தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின்

மாடுகள் வளர்ப்பவர்களுக்கு உரிய வாழ்வாதாரத்தை கொடுக்கும் திட்டம் உருவாக்கப்பட்டு வருவதாக LJK தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் அறிவித்துள்ளார். மேலும், “முறையாக பராமரிக்காமல் சாலைகளில் விடப்படும் மாடுகளால் விபத்துக்கள் ஏற்படுவதோடு, அந்த மாடுகள் பிளாஸ்டிக் பொருட்களை உட்கொண்டு கொடும் நோய்களை எதிர்கொள்கின்றன. இதற்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், பயன்படுத்தப்படாமல் உள்ள அரசு நிலங்களில், மாடுகளுக்கு காப்பகங்கள் அமைத்து, அவற்றிற்கு உணவு, தண்ணீர் அளித்து பராமரிக்கப்படும்” என்றார்.

தொடர்புடைய செய்தி