ஜம்மு காஷ்மீரின் கடும் பனிப்பொழிவுக்கு இடையே, பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி பெண்ணை இந்திய ராணுவ வீரர்கள் தோளில் சுமந்து சென்று உயிரை காப்பாற்றியுள்ளனர். ரத்தத்தை உறைய வைக்கும் குளிரில், முழங்கால் அளவுக்கு குவிந்திருந்த பனியையும் பொருட்படுத்தாமல் சுமார் பல கிலோமீட்டர் தூரம் அந்த பெண்ணை ராணுவத்தினர் பாதுகாப்பாக சுமந்து சென்றனர். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், வீரர்களுக்கு பலர் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
நன்றி:NewsTamil