எல்லையில் பாகிஸ்தான் உடனான சண்டையில் இந்திய ராணுவ வீரர் முரளி நாயக் வீர மரணமடைந்துள்ளதாக இந்திய ராணுவம் அறிவித்துள்ளது. முரளி நாயக் ஆந்திர பிரதேசத்தின் சத்ய சாய் மாவட்டத்தை சேர்ந்தவர் என தகவல் வெளியாகியுள்ளது. முரளி உயிரிழந்த தகவலை கேட்டதும் அவரின் குடும்பத்தினர் கதறி அழுதார்கள். இதனிடையே, பாகிஸ்தான் தாக்குதலை எதிர்கொண்டு முறியடிக்க எல்லையில் 60,000 வீரர்கள் குவிக்கப்படுகின்றனர்.