2026-ன் முதல் பகுதி அளவு சூரிய கிரகணம் வரும் பிப்.17 அன்று நிகழ இருக்கிறது. மதியம் 3:26 முதல் மாலை 7:57 வரை நீடிக்கும் இந்த நிகழ்வின் போது, சூரியன் ஒரு பிரகாசமான 'நெருப்பு வளையமாக'க் காட்சியளிக்கும். சந்திரன் சூரியனை மறைப்பதால் ஏற்படும் இந்த அரிய வானியல் மாற்றத்தை இந்தியாவில் காண முடியாது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், உலகளாவிய வானியல் ஆர்வலர்களிடையே இது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.