கரூர்: அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மண்வள அட்டை திட்டம் தயாரிப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. தோகைமலை வட்டாரம் ஆா்.டி.மலை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவா்களுக்கு தேசிய வேளாண் வளா்ச்சித் திட்டத்தின் கீழ் மண்வள அட்டை திட்டம் தயாரிப்பு பயிற்சி முகாம் நேற்று (பிப்.26) நடைபெற்றது. இம்முகாமில், பள்ளி மாணவா்களுக்கு மண் மாதிரி எடுப்பதன் முக்கியத்துவம், அதனால் ஏற்படும் நன்மைகள், மண் மாதிரிகள் எடுக்கும் முறை ஆகியவை குறித்து பயிற்சியளிக்கப்பட்டது.