இதய தமனிகளில் கொலஸ்ட்ரால் அல்லது கொழுப்பு சேர்ந்து அடைப்பை ஏற்படுத்தும் போது, ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு, மாரடைப்பு பக்க வாதம் ஏற்படும் ஆபத்து அதிகரிக்கிறது. அளவிற்கு அதிகமான சர்க்கரை சேர்த்த சோடா பானங்கள் இதய தமனிகளுக்கு தீங்கு விளைவிக்கும். இந்த பானங்களில் அதிக அளவு பிரக்டோஸ் கார்ன் சிரப் (HFCS) உள்ளது. இதனை அருந்துவதை வழக்கமாக்கிக் கொண்டால், உடலில் கொழுப்பு மற்றும் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கிறது. இதன் காரணமாக அடைப்பு ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது.