போட்டோஷாப் கலைஞராகவும், மீம் கிரியேட்டராகவும், சமூக வலைதளங்களில் பிரபலமாக அறியப்பட்டவர் Atheist கிருஷ்ணா. அவரது நகைச்சுவையான மீம்ஸ்கள் சமூகவலைதள வாசிகள் மத்தியில் மிகவும் பிரபலம். கிருஷ்ணா இன்று (ஜூலை. 23) உடல் நலக்குறைவால் காலமானார். இவர் கடந்த 2024இல் பிரதமர் மோடியை நகைச்சுவையாக சித்தரித்து வீடியோ வெளியிட்டார். இந்த வீடியோவை பிரதமர் மோடியே தனது அதிகாரப்பூர்வ பக்கத்தில் மகிழ்ச்சியாக பகிர்ந்திருந்தார்.