திமுக கூட்டணியில் இருந்து விலகி தவெக-வுடன் இணைந்து ஆட்சியமைத்த காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் மற்றும் ஐயுஎம்எல் கட்சித் தலைவர்களுடன் இணைந்து பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடத்த விஜய் திட்டமிட்டுள்ளார். திமுகவினர் இதனைத் தீவிரமாக விமர்சித்து வரும் நிலையில், விஜய் தலைமையில் நடைபெறவுள்ள இப்பொதுக்கூட்டத்தில் தங்களது கூட்டணிக்கு ‘மதச்சார்பற்ற சமூக நீதி கூட்டணி’ எனப் பெயர் சூட்டவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.