சென்னையில் நேற்று (ஜூலை 13) தமிழக வெற்றிக் கழகம் சார்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பொதுச்சொத்துகளை சேதப்படுத்தியது தொடர்பாக விசிக துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். “வெறுமனே ரசிக மனநிலையில் கும்பலை கூட்டினால் இப்படித்தான் சேதாரத்தை உருவாக்குவார்கள். தவெக முதலில் தொண்டர்களை உருவாக்க வேண்டும். ரசிகர்களை அல்ல” என்று காட்டமாக விமர்சித்துள்ளார்.