சிவன் கோவில்களுக்குள் நாகப்பாம்புகள் நுழைந்து தரிசனம் செய்யும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் அடிக்கடி பார்க்கிறோம். சமீபத்தில் அப்படி ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. ஸ்ரீசைலத்தில் பாதாள கங்கைக்கு அருகில் உள்ள சந்திரலிங்கத்தில் நாகப்பாம்பு ஒன்று காணப்பட்டது. லிங்கத்தைச் சுற்றி படமெடுத்து நின்றது. இந்த அரிய நிகழ்வை ஓம் நம சிவாய என்ற மந்திரத்துடன் உள்ளூர் பக்தர்கள் ஆர்வமுடன் பார்த்துச் செல்கின்றனர்.