அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள கோல்ஃப் மைதானத்திற்குள் புகுந்த பாம்பு ஒன்று, அங்கு கிடந்த 3 கோல்ஃப் பந்துகளை முட்டை என கருதி விழுங்கியுள்ளது. பந்துகளை விழுங்கி அவதியுற்ற அந்த பாம்பை உடனடியாக மீட்ட கால்நடை மருத்துவர்கள், அதற்கு மயக்க மருந்து கொடுத்து பாதுகாப்பாக சிகிச்சையளித்தனர். அறுவை சிகிச்சை எதுவுமின்றி மருத்துவர்கள் சாதுரியமாக செயல்பட்டு பாம்பின் வயிற்றிலிருந்த கோல்ஃப் பந்துகளை பத்திரமாக வெளியே எடுத்து அதனை காப்பாற்றியுள்ளனர்.
நன்றி:Tamil The Hindu