காய்ச்சலுடன் விளையாடிய ஸ்மிருதி மந்தனா: இறுதிப் போட்டியில் அசத்தல்

மகளிர் பிரீமியர் லீக் இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சாம்பியன் பட்டம் வென்றது. கேப்டன் ஸ்மிருதி மந்தனா தீவிர காய்ச்சலுடன் விளையாடியதாக ஆர்சிபி பயிற்சியாளர் தெரிவித்துள்ளார். நேற்று (பிப்., 05) குஜராத்தின் வதோதராவில் நடந்த இறுதிப்போட்டியில், டெல்லி கேபிடல்ஸை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆர்சிபி வெற்றி பெற்றது. 204 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய ஸ்மிருதி மந்தனா 41 பந்துகளில் 87 ரன்களும், ஜார்ஜியா வோல் 54 பந்துகளில் 79 ரன்களும் எடுத்தனர்.

தொடர்புடைய செய்தி