சென்னை ஆர்.ஏ.புரம் பகுதியில் வசித்துவருபவர் சின்னத்திரை நடிகர் கார்த்திக். இவரது மகன் நிதீஷ் ஆதித்யா(21) நேற்று நள்ளிரவு தீபாவளி கொண்டாட்டத்தை முடித்துவிட்டு நண்பர்களுடன் காரில் வந்துகொண்டிருந்தார். வேளச்சேரி - தரமணி சாலையில் வந்தபோது அவர்களது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே இருந்த தடுப்புச்சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்நிலையில், சீட்பெல்ட் அணியாததால்தான் நிதீஷ் உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
நன்றி: தந்தி