செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே அதிக சத்தத்துடன் சிறிய ரக விமானம் வெடித்துச் சிதறியது. விமானம் வெடித்துச் சிதறிய நிலையில் அதில் பயணித்த விமானிகள் உயிர்தப்பினர். பாராசூட் மூலம் விமானிகள் உயிர்தப்பிய நிலையில் விமான வெடிப்பிற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. சமீபத்தில் புதுக்கோட்டையில் சிறிய ரக விமானம் ஒன்று சாலையில் தரையிறங்கிய நிலையில், திருப்போரூரில் விமானம் வெடித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.