பெரிய வெங்காயத்தை விட சின்ன வெங்காயத்தில் மருத்துவ குணங்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிக அளவில் நிறைந்துள்ளன. சின்ன வெங்காயம் உடலை குளிர்ச்சியாக வைப்பதுடன் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது. சுவை மற்றும் சத்து என இரண்டிலும் சின்ன வெங்காயமே ஆரோக்கியத்திற்கு சிறந்த தேர்வாகும்.