குஜராத் மாநிலத்தில், சொல்லாமல் கொள்ளாமல் தாய் வீட்டில் தங்கியதால் மனைவியை அவரது கணவர் அறைந்துள்ளார். இதனால், கொடுமைப்படுத்தியதாக மனைவி கொடுத்த வழக்கில், கணவருக்கு ஓராண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து கணவர் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், மனைவியை ஒருமுறை அறைந்த சம்பவத்தை கொடுமைப்படுத்தியதாக கருத்தில் கொள்ள முடியாது எனக்கூறி அவரை விடுவித்து அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.