விண்ணை முட்டும் விமானக் கட்டணம்; பயணிகள் அதிர்ச்சி!

விஜயதசமி தொடர் விடுமுறையை முன்னிட்டு சென்னையிலிருந்து பிற நகரங்களுக்குச் செல்லும் விமானக் கட்டணம் விண்ணைத் தொட்டுள்ளது. தூத்துக்குடிக்கான கட்டணம் ரூ.17,300 ஆகவும், கோவைக்கு ரூ.16,600 ஆகவும் உயர்ந்துள்ளது. வெளிமாநில நகரங்களான பெங்களூருக்கு ரூ.18,000, மும்பைக்கு ரூ.22,300 மற்றும் டெல்லிக்கு ரூ.23,000 வரை கட்டணம் எகிறியுள்ளதால் பயணிகள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். பண்டிகைக் காலங்களில் கட்டண உயர்வை முறைப்படுத்த அரசு தலையிட வேண்டும் எனப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி

✕
✕