சிவகார்த்திகேயனின் புதிய படம்: எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

நடிகர் சிவகார்த்திகேயனின் அடுத்த திரைப்படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 'தாய் கிழவி' படத்தை இயக்கிய சிவகுமார் முருகேசன் சொன்ன கதை சிவகார்த்திகேயனுக்கு பிடித்துள்ளதாகவும், இதனை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்படம் கிராமப் பின்னணி கதையாக உருவாகவுள்ளதாகவும், இது உறவுகளை மையப்படுத்திய கதையாக இருக்கலாம் என்றும் தெரிகிறது. முன்னதாக, சிபி சக்கரவர்த்தி அல்லது வெங்கட் பிரபு இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி