தென்காசி மாவட்டம் சிவகிரியில் உள்ள பழமை வாய்ந்த திரவுபதி அம்மன் கோவிலில் வைகாசி மாத பூக்குழி திருவிழா நேற்று நடைபெற்றது. இதில் கோவில் பூசாரி மாரிமுத்து முதலில் பூக்குழி இறங்கினார். தொடர்ந்து விரதம் இருந்த 120 பெண்கள் உள்பட 730 பேர் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். இன்று மஞ்சள் நீராட்டு விழாவும், இரவு இந்து முஸ்லிம் ஒற்றுமையை வலியுறுத்தும் சிறப்பு பூஜைகளும் நடைபெறும்.