புதிதாக தொழில் தொடங்க, தொழில்மனைகள் வாங்க விரும்புவோர் www. tansidco. tn. gov. in என்ற இணையதளம் வாயிலாக தங்கள் விண்ணப்பங்களை பதிவு செய்து கொள்ளலாம். அதுமட்டுமன்றி, தமிழ்நாட்டில் தமிழ்நாடு சிட்கோவிற்கு சொந்தமாக அமைந்துள்ள தொழிற்பேட்டைகளின் காலிமனைகள் விவரங்களை மேற்குறிப்பிட்டுள்ள இணையத்தளத்தின் வாயிலாக தெரிந்து கொண்டு தேவையானவற்றை இனையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
மேலும், மேற்கண்ட காலி தொழில்மனைகளை பார்வையிட கிளை மேலாளர் அவர்களை சிட்கோ கிளை மேலாளர், தொண்டி ரோடு, சிவகங்கை என்ற அலுவலக முகவரியிலோ, 9445006578 என்ற அலைபேசி எண்ணிலோ, bmsvg@tansidco. org என்ற மின்னஞ்சல் முகவரியிலோ அல்லது www. tansidco. org என்ற இணைய முகவரியின் வாயிலாகவோ தொடர்பு கொண்டு தொடழிற்பேட்டைகளின் காலிமனைகள் குறித்த விபரங்கள் பெற்று பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.