சிவகங்கை: பெண் மின்சாரம் தாக்கி பலி; போலீசார் விசாரணை

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள ஒடுவன்பட்டியைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவரது மனைவி ஜெயலட்சுமி. இன்று(டிச.12) காலை விவசாய பணிகளை மேற்கொள்ள வயல்வெளிக்குச் சென்ற பொழுது அங்கே மின்சார கம்பி அறுந்து விழுந்து கிடந்ததை கவனிக்காமல் மிதித்ததால் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு பிரான்மலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குக் கொண்டு சென்ற நிலையில் அங்கு பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். 

மின்சாரக் கம்பி அறுந்து விழுந்து பெண் ஒருவர் பலியான சம்பவம் கிராமத்தைச் சோகத்தில் ஆழ்த்தியது. சம்பவம் குறித்து சிங்கம்புணரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த கிராமத்தில் ஏற்கனவே மின்சாரக் கம்பி அறுந்து விழுந்து மாடுகள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி