சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையைச் சேர்ந்த ரமேஷ்குமார் என்பவரிடம், திண்டுக்கல் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் என கூறி, திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் உதவி பொறியாளர் பணி வாங்கித் தருவதாக கூறி, சுமதி என்ற முத்துலெட்சுமி என்பவர் ரூ. 4.15 லட்சம் மோசடி செய்துள்ளார். மேலும், பணத்தை கேட்டால் கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து ரமேஷ்குமார் அளித்த புகாரின் பேரில், முத்துலெட்சுமி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.