சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு உட்பட்ட , சேவுகப்பெருமாள் அய்யனார் கோயில் வைகாசி விசாக திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முளங்க அய்யனாருக்கு காப்பு கட்டிய உடன் , பிடாரி அம்மன் சன்னதி முன்புள்ள வெள்ளி கொடிமரத்தில் முதலாவதாக சிம்ம கொடி ஏற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து சேவுகப் பெருமாள் சன்னதி முன்பு உள்ள தங்க கொடிமரத்தில் சிவாச்சாரியர்கள் வேத மந்திரங்கள் முழங்க கஜகொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து கொடிமரத்திற்கு புனிதநீர் ஊற்றப்பட்டு சிறப்பு தீபரதனைகள் காண்பிக்கப்பட்டது.
வண்ண மலர் அலங்காரத்தில் சேவுகப்பெருமாள் அய்யனார் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பத்து நாட்கள் நடைபெறும் திருவிழாவில். தினமும் இரவில் வெள்ளி சிம்மம், மூஷிகம், பூதம் குதிரை, ரிஷபம், கேடயம், உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி வீதிஉலா நிகழ்ச்சி நடைபெறும்.