கோவில் உரிமை விவகாரம் கிராம மக்கள் அதிருப்தி

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே ஒழுகமங்கலம் கிராமத்தில் உள்ள வரம் வழங்கி அம்மன் கோவிலின் பரம்பரை அறங்காவலர் ஆண்டியப்பன், கோவில் நடவடிக்கைகளில் தலையிடுவதாக கிராம மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இது தொடர்பாக மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. வரவிருக்கும் திருவிழா முன்னேற்பாடாக நடைபெறவிருந்த கிடா வெட்டும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் பாதிக்கப்பட்டதாகவும், கோவில் மடப்பள்ளி கட்டிடம் பூட்டப்பட்டதால் தேவையான பொருட்களை எடுக்க முடியவில்லை எனவும் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். கோவில் அனைவருக்கும் சொந்தமானது என்றும், தேவஸ்தானம் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்றும் கிராம மக்கள் சார்பில் கண்ணன் கூறியுள்ளார். மேலும், கோவில் முன்பு வைக்கப்பட்டுள்ள பரம்பரை அறங்காவலர் பெயர் பலகையை அகற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி