பழைய மாடல் பேருந்துகள் என்பதால் மலைப்பாதையில் ஏற முடியாமல் திணறி பின்னோக்கி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் உயிருக்கு பயந்து 30க்கும் மேற்பட்ட பயணிகள் பேருந்தை விட்டு இறங்கி சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் மலை உச்சியை நோக்கி கால்நடையாக நடந்து சென்று மலை உச்சியில் சென்று நின்ற அரசு பேருந்தில் ஏறி மீண்டும் பயணம் செய்த அவலம் இன்று அரங்கேறியது.
கடந்த வாரம் இதே மலைப்பகுதியில் அதே பணிமனையை சேர்ந்த 10ம் நம்பர் அரசு பேருந்து மலையில் ஏற முடியாமல் திணறி பின்னோக்கி வந்ததால் பேருந்து நடத்துனர் பாறாங்கல் தூக்கிக் கொண்டு நடத்துனர் பேருந்தின் பின்புறம் நடந்து சென்ற வீடியோ வைரல் ஆன நிலையில் மீண்டும் அதே பணிமனையை சேர்ந்த 11ம் நம்பர் அரசு பேருந்தும் மலையில் ஏற முடியாமல் பயணிகளை நடந்து வரச் சொல்லி ஏறிச்சென்ற சம்பவ வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.