சிவகங்கை: சிலம்பம் போட்டியில் மாணவிகளை வீடியோ எடுத்ததால் பரபரப்பு

சிவகங்கையில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டி ஆறாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவிகளுக்கு நடைபெற்றது. இதில் சிவகங்கை பகுதியைச் சுற்றியுள்ள பள்ளிகளின் மாணவிகள் கலந்துகொண்டனர். 

இப்போட்டியானது தனித்தனி பிரிவுகளாக ஒற்றைக்கம்பு சுற்றுதல், இரட்டைக்கம்பு சுற்றுதல், சிலம்பச் சண்டை என்று மூன்று விதமாக நடைபெற்றது. மேலும் வயது மற்றும் எடை அடிப்படையிலும் விளையாட்டு அடிப்படையிலும் இரண்டு பிரிவுகளாகவும் சுமார் 230 மாணவிகள் கலந்துகொண்டு சிலம்பம் போட்டி நடைபெற்றுக்கொண்டிருந்த நிலையில், அங்கு வந்த சில நபர்கள் மாணவிகளை வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது. இருந்த உடற்கல்வி ஆசிரியர்களுக்கும் வீடியோ எடுத்த நபர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. 

வீடியோ எடுத்த நபர்கள் உடற்கல்வி ஆசிரியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது முறையான நடுவர், தண்ணீர் மற்றும் மைதான வசதி செய்துதராமல் வெயிலில் சிலம்பம் போட்டி நடத்துவதாக குற்றம்சாட்டினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

தொடர்புடைய செய்தி