சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே சதுர்வேதமங்கலம் ஆத்ம நாயகி அம்பாள் உடனுறை ருத்ர கோடீஸ்வரர் கோவில் மாசி மக பெருந்திருவிழாவை முன்னிட்டு அரளிப்பாறை மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில் அரளிப்பாறை காட்டுப் பகுதியில் அவிழ்த்து விடப்பட்ட மஞ்சுவிரட்டு காளை ஒன்று சுந்தர்ராஜன் என்பவரை விரட்டிச் சென்றது. உயிர் பயத்தில் ஓடிய சுந்தர்ராஜனை காளை குத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த துயர சம்பவத்தில் மூன்று பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.