காரைக்குடி ரயில்வே ஸ்டேஷன் அருகே யாசகம் பெற்று வாழ்ந்து வந்த சுமார் 35 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத நபர் ஒருவர் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். அழகப்பாபுரம் போலீசார் அவரது உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்தவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர், அவரது இறப்புக்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.