திருச்சி-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் மானகிரி அருகே வந்தபோது, காரைக்குடியிலிருந்து தேவகோட்டைக்கு சென்ற தனியார் பேருந்தின் சக்கரம் வெடித்ததால், நிலை தடுமாறிய பேருந்து இவர்கள் சென்ற இரு சக்கர வாகனம் மீது மோதிவிட்டு சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த விஜயகுமார், மணிகண்டன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தகவலறிந்து வந்த நாச்சியாபுரம் போலீசார் இருவரது சடலங்களையும் மீட்டு, கூறாய்வுக்காக சூரக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.