சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் நகர் காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணா பைரவர் கோவில் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது ரனசிங்கபுரம் பகுதியைச் சேர்ந்த கண்ணப்பன் (29) மற்றும் திருவுடையார்பட்டி பகுதியைச் சேர்ந்த முருகன் (39) ஆகிய இருவரும் பொதுமக்களை வாளைக் கொண்டு அச்சுறுத்தியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து இருவரையும் கைது செய்த காவல்துறையினர், அவர்களிடமிருந்து இரண்டடி நீளமுள்ள வாளை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.