இதையொட்டி, தினசரி பல்வேறு வாகனங்களில் அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஏழாவது நாளன்று தங்கரதம் நிகழ்ச்சி நடந்தது. எட்டாவது நாள் இரவில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட புகழ்பெற்ற வெள்ளிரதத்தில் கண்ணுடைய நாயகி அம்மன் திருவீதி உலா வந்தார்.
இதனை காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த எண்ணற்ற பக்தர்கள் திரண்டனர். ஒன்பதாவது நாளான இன்று தேரோட்டம் நடைபெற்றது, சிறப்பு அலங்காரத்தில் அம்மன் தேரில் வீற்றிருந்து திருவீதி உலா வந்தார். சுற்றுவட்டார பகுதி மக்கள் பட்டாசு, பஜனை, இசை ஒலியுடன் ஆடிப் பாடி தேரை வடமிட்டு இழுத்து பக்தியுடன் கலந்து கொண்டனர்.