சிங்கம்புணரியில், தமிழ்நாடு அரசு ஊழியர்-ஆசிரியர் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ சார்பில் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தத்துடன் கூடிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதிய ஓய்வூதியத் திட்டத்தை (CPS) ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை (OPS) அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சிங்கம்புணரி ஒன்றியம் முழுவதும் உள்ள 66 பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் பங்கேற்றனர். சாரல் மழை பெய்தபோதும், ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.