இந்த ஆண்டு மார்கழி மாதம் முதல் தேதியே இந்த கட்டானிபட்டி கிராமத்தை சுற்றியுள்ள பெரியகோட்டைப்பட்டி, பொன்குண்டுபட்டி, நடுவுப்பட்டி, கீழப்பட்டு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த மக்கள் காப்புக்கட்டி தங்களது விரதத்தை துவங்குவதுடன் தைப்பூசத்தன்று காவடி, பால் காவடி, பரவை காவடி, புஷ்ப காவடி உள்ளிட்ட பல்வேறு நேர்த்திகடன்களை சுமந்து சுமார் 2 கி.மீ தூரம் நடந்து அருள்மிகு மலைக்கந்தன் கோவிலுக்கு சென்று நேர்த்திக்கடனை செலுத்துவதுடன் மலைக்கந்த சாமிக்கு பாலபிஷேகம், சந்தன அபிஷேகம், திருநீரபிஷேகம், பண்ணீர் அபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்களை செய்து அலங்கரிக்கப்பட்டு பின்னர் பொது மக்களுக்கு காட்சி தரும் நிலையில் அதனை ஏராளமான பக்தர்கள் கண்டு சாமி தரிசனம் செய்து செல்வர்.
இந்த ஆண்டு 43ஆம் ஆண்டு தைப்பூச திருவிழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு பால்காவடி, பன்னீர் காவடி உள்ளிட்டவைகளை சுமந்து சென்று தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி சாமி தரிசனம் செய்தனர்.