காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் மளமளவென தீ மலை உச்சி வரை பரவத் தொடங்கியது. இதில் லெமன் கிராஸ் புல், மரங்கள் பற்றி எரிந்ததால் வானுயர புகை எழுந்தது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறை மற்றும் வனத்துறையினர் பொதுமக்கள் உதவியுடன் செடிகளை வைத்து அணைத்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
மலைப்பகுதியில் உள்ள மரக்கிளைகளில் உள்ள தேன் எடுப்பதற்காக தீ பற்றவைத்ததில் காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீ பரவி இருக்கலாம் எனப் பொதுமக்கள் தெரிவித்தனர்.