சிறுபான்மையினர் நலத்திட்டங்கள் குறித்து ஆய்வுக்கூட்டம்

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் கா. பொற்கொடி தலைமையில் சிறுபான்மையினர் நலத்திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் சிறுபான்மையினரின் கல்வி, பாதுகாப்பு, பொருளாதார முன்னேற்றத்திற்கான அரசுத் திட்டங்கள் விவாதிக்கப்பட்டன. புதிய கோரிக்கைகள் சட்டசபையில் முன்வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. முஸ்லீம், கிறித்துவ மகளிர் சங்கங்கள், உலமாக்கள், தேவாலய பணியாளர் நல வாரியங்கள் மூலம் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுவதாகவும், டாம்கோ மூலம் கடனுதவி வழங்கப்படுவதாகவும் கூறப்பட்டது. சிறுபான்மையினருக்கான கல்லறை, கபர்ஸ்தான் அமைக்க நிலம் ஒதுக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மொத்தம் 53 பயனாளிகளுக்கு ரூ. 6.45 லட்சம் மதிப்பிலான சுயதொழில் உதவித்தொகை ஆணைகள் வழங்கப்பட்டன.

தொடர்புடைய செய்தி