சிவகங்கை–மேலூர் வழித்தடத்தில் காலை 8 மணிக்கு இயக்கப்பட்டு வந்த அரசு பேருந்து (6A) சில மாதங்களாக முன் அறிவிப்பின்றி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் மன்னர் துரைசிங்கம் அரசு கலைக் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். பேருந்து சேவையை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.