மூலவர் கற்பகவிநாயகர் தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி தரும் நிலையில் தமிழர்களின் முதல் கடவுளாக போற்றப்படுகின்ற விநாயகப் பெருமானை தரிசிக்க தமிழகம் முழுவதும் மட்டுமன்றி வெளிநாடுகளிலும் வெளிமாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து நீண்ட வரிசையில் தங்க கவச அலங்காரத்தில் காட்சி தரும் கற்பக விநாயகரை தரிசித்தனர்.
இதேபோல தற்போது கேரள மாநிலம் ஐயப்பன் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் விரதம் இருந்து சென்று வரும் பக்தர்கள் செல்லும் வழியில் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகரையும் தரிசிக்க கோயில் வளாகத்தில் குவிந்து கற்பக விநாயகரை தரிசித்தனர். பக்தர்களின் வசதிக்காக கோயில் நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு பக்தர்களின் அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
காவல்துறை சார்பில் 30க்கும் மேற்பட்ட முக்கிய இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டன. ஆங்கில புத்தாண்டு தினத்தை முன்னிட்டு பிள்ளையார்பட்டியில் 750க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.