சிவகங்கை: ஜூன் 1 முதல் சிறப்பு தொழில் கடன் முகாம்

சிவகங்கை மாவட்டத்தில் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழிலதிபர்கள் பயன்பெறும் வகையில், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSME) தொடர்பான சிறப்பு தொழில் கடன் முகாம் ஜூன் 1 முதல் ஜூன் 30, 2026 வரை நடைபெற உள்ளது. தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் (TIIC) சார்பில் நடைபெறும் இந்த முகாம், காரைக்குடி எஸ். பி. கே. வணிக வளாகத்தில் உள்ள கிளை அலுவலகத்தில் நடைபெறும் என மாவட்ட ஆட்சித்தலைவர் பொற்கொடி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி