மாநில குத்துச்சண்டை போட்டிக்கு சிவகங்கை மாணவர்கள் தகுதி

சிவகங்கை அரசு உதவிபெறும் ஆர். ஆர். ஆர். கே நடுநிலைப்பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவிலான குத்துச்சண்டை போட்டியில் சிறப்பான பங்களிப்பை அளித்து, மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். சிவகங்கை 21ஆம் நூற்றாண்டு பதின்ம மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இப்போட்டியில், 14, 17, 19 வயது பிரிவுகளில் 10 எடைப் பிரிவுகளில் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். ஆர். ஆர். ஆர். கே பள்ளியைச் சேர்ந்த 13 மாணவர்களில் 6 பேர் தங்கப் பதக்கமும், 4 பேர் வெள்ளிப் பதக்கமும் வென்றனர். தங்கப் பதக்கம் வென்ற 6 மாணவர்கள் வரும் ஜனவரி 5, 6, 7 தேதிகளில் தேனியில் நடைபெறும் மாநிலப் போட்டியில் பங்கேற்பார்கள். மாநிலப் போட்டிக்குத் தேர்வான மாணவர்களை மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் ராஜேந்திரன் மற்றும் வட்டார கல்வி அலுவலர்கள் பாராட்டினர்.

தொடர்புடைய செய்தி